Tuesday, August 05, 2008

தூது

இனியவளே!
தென்றலே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
நீயும் சுடுகிறாயே!
சூரியனே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
என் பொழுது விடிய வில்லையே!
நிலவே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன்னையும் பிடிக்கவில்லையே!
நதியே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன் ஓட்டம்தான் பிடிக்கவில்லையே!
நீங்களாவது
அவளிடம்
என் காதலை சொல்லுவீர்களா?
ஏனென்றால்
அவள் விழியை
பார்த்த பின்
என் காதலைதான்
மறைத்து விடுகிறேனே..............!

1 comment:

ரசிகன்! said...

பெரும்பாலான காதலர்களின் மனதை பிரதிபளித்துவிட்டீர்கள்!!!

கடைசி வரியில்!!!

அவள் பார்வையின் காதலில்!