Wednesday, August 06, 2008

ஒற்றைகால் ரோஜா

இனியவளே!
ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?
நீ
என் காதலை மறுப்பதால்...!
ரோஜாவும் முள்ளும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
நிலவும் மேகமும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
ஆனால்
எனக்கும் உனக்கும்
காதல் இல்லை
என்று கூறாதே!!!

2 comments:

Anonymous said...

உங்கள் கவிதை சூப்பர்....என் மனதை பிரதிபலிக்குது

ரசிகன்! said...

ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?//


அழகான சிந்தனை வெளிப்பாடு!!!

ஹ்ம்ம் :)