Friday, August 01, 2008

ஆசை

இனியவளே!
என்னை
காதலிக்காத
உன் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு;
என்னை
பார்க்காத
உன் விழியை
பிடுங்கி எறிந்து விடு;
என்னிடம் காதல் செய்யாத
உன் கையை
வெட்டி எறிந்து விடு
என்று
சொல்ல மாட்டேன்...!
நீ
காதலிக்காத
உன்னை
காதலித்த
என் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு!
நீ
வெறுத்த
என்னுயிரை
அழித்து எரித்து விடு!
உன்னை
வர்ணித்து
கவி எழுதிய
என் கையை
வெட்டி எறிந்து விடு!
இந்த
ஆசைகளை மட்டும்
நிறைவேற்றுவாயா?

1 comment:

Anonymous said...

நண்பா....
காதலிக்காத காதலிகளுக்கு
சவுக்கடி.... உண்மை காதல் வாழ்க...