Friday, October 10, 2008

காதல் சக்தி

இனியவளே!
உன்னிடம்
நான்
காதலை சொல்ல
பறித்த
ரோஜாதான்
எத்தனை சறுகாயிருக்கலாம்?
என் காதலை
காவியமாக தாங்கிய
தாள்கள்தான்
எத்தனை கிழிக்கப்பட்டுருக்கலாம்?
உன்னை
வர்ணித்து
கவி எழுத
தமிழிடம்
வார்த்தைகள் எத்தனை
கடன்பட்டுயிருக்கலாம்?
இதுவெல்லாம் இருக்கட்டும்.....!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி....?!
காதலை சொல்லுவதற்கு
முன்பே
அதை தடுக்கும்
உன் பார்வை;

Friday, August 15, 2008

காதலன்

இனியவளே!
என்னுடன்
கண்ணோடு கண்
பேசி
காதல் செய்ய
காதலி வருவாயா?
உயரத்தில்
கதிரவன்தான்
குடை பிடிக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

நம்முடன்
தென்றல்தான்
துணைக்கு இருக்க
காதல் செய்ய
காதலி வருவாயா?

கைகள்தான் தொடாமல்
தொட்டு
காதல் செய்ய
காதலி வருவாயா?

இதுவெல்லாம் வேண்டாம்
காதலன்
நீதான் என்று
காதலை சொல்ல
காதலி வருவாயா?

வாழ்க்கை

இனியவளே!
சிரித்துக்
கொண்டே
என்னை
அழ வைக்கிறாயே...!
ஏன்
காதலித்து
கொண்டே
என்னை
வாழ வைக்கலாமே....!!!!

நினைவு

இனியவளே!
கதிரவன் தான்
காலையில்
விழிக்காமல்
இருந்தாலும்;
உயிரிகள்தான்
உறக்கம்
தெளியாமல்
இருந்தாலும்;
தென்றல்தான்
இதம்
தராமல்
இருந்தாலும்;
நான்
உன் நினைவு
இல்லாமல் இருக்க மாட்டேன்!!!

Wednesday, August 06, 2008

ஒற்றைகால் ரோஜா

இனியவளே!
ஒற்றைக்காலில்
நிற்கும்
ரோஜாவை
பறித்து,
அதை
ஊனப்படுத்தி
உன்னிடம்
கொடுத்து
வந்த காதல்
பின்பு
என் மனதை
ஊனப் படுத்தி விடுமா?
நீ
என் காதலை மறுப்பதால்...!
ரோஜாவும் முள்ளும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
நிலவும் மேகமும்
ஒன்றாகதான் உள்ளது;
அது காதலாகாதுதான்!
ஆனால்
எனக்கும் உனக்கும்
காதல் இல்லை
என்று கூறாதே!!!

Tuesday, August 05, 2008

தூது

இனியவளே!
தென்றலே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?
அவள் இல்லாமல்
நீயும் சுடுகிறாயே!
சூரியனே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
என் பொழுது விடிய வில்லையே!
நிலவே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன்னையும் பிடிக்கவில்லையே!
நதியே
என்னவளிடம்
காதலை சொல்லுவாயா?

அவள் இல்லாமல்
உன் ஓட்டம்தான் பிடிக்கவில்லையே!
நீங்களாவது
அவளிடம்
என் காதலை சொல்லுவீர்களா?
ஏனென்றால்
அவள் விழியை
பார்த்த பின்
என் காதலைதான்
மறைத்து விடுகிறேனே..............!

சமத்துவ சமுதாயம்

இனியவளே!
இறந்தவர்களை
புகழ்கிறது
சமுதாயம்;
இல்லாதவர்களை
வர்ணிக்கிறது
சமத்துவம்;
ஆனால்
இறக்காமல்
இருக்கும்
உன்னைப்பற்றி
மட்டும்
பேசும்
என் கவிதை.....!
சோலையும்
தேன்றலையும்
பிரிக்க முடியாது;
சூரியனையும்
பிரகாசத்தையும்
பிரிக்க முடியாது;
விண்மீனையும்
இரவையும்
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன் நினைவையும்
என்னையும்
பிரிக்க முடியாது;

Sunday, August 03, 2008

கவிதையா? நானா?

இனியவளே!
உன்னை
வர்ணித்து
கவிதை எழுதி தந்தேன்;
அதை
படித்த
நீ
என்னை
விரும்பாமல்
கவிதையை விரும்பினாய்;
உனக்கு தெரியுமா?
உன்னை
உயிருக்குயிராய்
விரும்புவது
கவிதை அல்ல....!
நான்தான்....!
உன் விழியை
கூர்மையானது
என்றேன்;
தவறாகிவிட்டது
ஏனென்றால்
உன் விழி
என் இதயத்தையே
கிழித்து விட்டது

Saturday, August 02, 2008

காதல் கடவுள்

இனியவளே!
கண்ணை விட
இதயம்
கடினமானது.....!
சிறு தூசு
விழுந்தாலும்
கண் கலங்குகிறது;
ஆனால்
காதலிக்காத
உன் வார்த்தையை....
அதாவது
இடி போன்ற
உன்
வார்த்தையை
இதயம் தாங்குகின்றது....!
இடியை
தாங்கும்
என்னிதயம் கடினமானதுதானே!
காதலும்
இறைவனை போன்றது;
உண்டு என்றால் உண்டு;
இல்லை என்றால் இல்லை;
உணர்பவனுக்கு உண்டு;
உணராதவனுக்கு இல்லை;
காதலும்
இறைவனை போன்றது....

Friday, August 01, 2008

சொல்லாத காதல்

இனியவளே!
என் இதயம்
எத்தனை முறை
துடிக்குது
தெரியுமா?
என்னிதயம்
அத்தனை முறையும்
உன்னை
நினைப்பது
புரியுமா?
வெறி பிடித்து
உனை
பார்த்த
கண்கள்
வெறித்து விட,
தறிக் கெட்டு
போன
மனசு
துடித்து விட,
கரிக்கும்
கண்ணீரும்
தீர்ந்து விட,
காதலிக்கும்
உன்னிடம்
காதலை சொல்ல முடியவில்லை.....!

தவிப்பு

இனியவளே!
நான்
வீணாக்கிய
நாட்களில்
மிகவும் வீணான
நாட்கள்
உன்னைப்
பார்க்காத நாட்களே!
என் மனதில்
இருக்கும்
காதலை
மனசு
இல்லாத
உன்னிடம்
எவ்வாறு சொல்லுவது?
தனியாக
இருக்கும் பொழுது
"நான்
உன்னை
காதலிக்கிறேன்"
என்று
சொல்லி பார்க்கிறேன்;
உன்னிடம்
அதை
சொல்ல முடியாமல்
தவிக்கிறேன்!

ஆசை

இனியவளே!
என்னை
காதலிக்காத
உன் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு;
என்னை
பார்க்காத
உன் விழியை
பிடுங்கி எறிந்து விடு;
என்னிடம் காதல் செய்யாத
உன் கையை
வெட்டி எறிந்து விடு
என்று
சொல்ல மாட்டேன்...!
நீ
காதலிக்காத
உன்னை
காதலித்த
என் இதயத்தை
பெயர்த்து எறிந்து விடு!
நீ
வெறுத்த
என்னுயிரை
அழித்து எரித்து விடு!
உன்னை
வர்ணித்து
கவி எழுதிய
என் கையை
வெட்டி எறிந்து விடு!
இந்த
ஆசைகளை மட்டும்
நிறைவேற்றுவாயா?

காதலும் உயிரும்

இனியவளே!
சிரிக்காத
ரோஜாவுக்கு
அழகு எதற்கு?
சுற்றாத
சூரியனுக்கு
கதிர் எதற்கு?
ஒளிராத
நிலவுக்கு
பொலிவு எதற்கு?
சில்லிடாத
சோலைக்கு
தென்றல் எதற்கு?
உன்னிடம்
காதலை சொல்லாத
எனக்கு
இதயம் எதற்கு?
காதலை
நான்
சொல்லி
நீ
வெறுத்து விட்டால்
எனக்கு
உயிர்தான் எதற்கு?

Monday, April 07, 2008

நம்பிக்கை

இனியவளே!
நித்தம்
வந்து முத்தமிடும்
தென்றல் சுடுமா?
மணம்
தந்து மனம் பறிக்கும்
பூக்கள் முட்கள் ஆகுமா?
ஆதவன்
ஆர்ப்பாட்டம் அடங்கிய பின்
நிலா வருமா?
தெரியவில்லை...
இனியவன் என்னை
இனியவள் நீ காதலிப்பாயா?
கட்டாயம் காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
நம்பிக்கை வைத்து
காத்திருப்பேன்....!

ஒரு தலை காதல்

இனியவளே!
குழம்ப வேண்டாம்;
குழப்பமும் வேண்டாம்;
இனியவள் நீயே!
என்னிடம்
சொல்லி விட்டு
காதல் வர வில்லை;
அதனால்
உன்னிடம்
சொல்லி விட்டு
நானும் காதலிக்க வில்லை!
உன்னை
என்னுடன் பழக சொல்லவில்லை;
என்னை காதலிக்க சொல்கிறேன்!
உன்னிடம்
சொல்லி விட்டு
காதலிப்பதை விட
சொல்லாமல்
காதலிப்பதே சுகம்...
ஏனென்றால்
உன்னிடம் காதலை
சொல்லி,
என்னை நீ
மறுத்து வெறுத்து விட்டால்,
இதயத்தில்
ஏற்படுமே
ஒரு வலி.....
ஏய்
சொல்ல முடியலடி....;

Sunday, April 06, 2008

நினைவு

இனியவளே!
கடிகாரத்தில்
சின்ன முள்ளும்
பெரிய முள்ளும்
மணியை ஓட விட...
உதயனும்
ஊரை சுற்றிவிட்டு
உதித்த இடத்திற்கு ஓடி விட...
நிலாவும்
நினைத்த இடத்தில்
ஒளியை பிரகாசிக்க...
ஆர்ப்பாட்டம்
நடந்த
சாலையெல்லாம்
அடக்கி வாசிக்க...
என்னிதயம் மட்டும்
படபடப்புடன்
என் உயிரை
உன்னிடத்தில்
கொடுத்து விட்டு
துடிக்கிறது...!
அர்த்தமில்லா
காரணம் சொல்லி
மறுத்து விடுவாயா
என் காதலை?
வேண்டாமென்று
வெறுத்து விடுவாயா
என்னை?
தெரியவில்லை...!!!
இருந்தாலும்
நீயே
என் காதலி
என்
நினைவிருக்கும் வரை....
என்
நினைவு
உனக்கு
ஞாபகப்ப்டுத்தும்
என் காதலை
நீ
என்னை
நினைக்கும் வரை...!!!!

நீ வருவாய் என?

இனியவளே!
எழுத்தில்
கவிதையாக...
துக்கத்தில்
கனவாக...
கண்களில்
காட்சியாக...
இதயத்தில்
காதலாக
வந்த
நீ...
எந்த நாள்
காதலியாக
வரப் போகிறாய்?

குழப்பம்

இனியவளே!
நடக்கும் போது
முடியும் இடம்
தெரியவில்லை;
பார்க்கும் போது
வேறு ஒன்றும்
தெரியவில்லை;
பேசும் போது
சொல்லும் வார்த்தை
புரியவில்லை;
தூங்கும் போது
தூக்கமும் வந்தது இல்லை;
தனித்த போது
இனிமையாக
இருந்ததில்லை;
காதலிக்கும் போது
உன் பதிலும்
தெரியவில்லை;
இந்த
அவஸ்தையெல்லாம்
இல்லாமல் இருக்க
இனியவள்
நீ
என்னை காதலிப்பாயா?

ஆதரவு

இனியவளே!
தனிமை
என்றால்
இனிக்கனும்;
தென்றல்
என்றால்
சிலிர்க்கனும்;
மனசு
என்றால்
நினைக்கனும்;
இதயம்
என்றால்
துடிக்கனும்;
காதல்
என்றால்
ஜெயிக்கனும்;
அதற்கு
உன் தயவு
இருக்கனும்;
நம்பிக்கையுடன்
உன் தயவில்
உயிர் வாழ நினைக்கும்
உன்னவனின்
காதல் ஜெயிக்க
ஆதரவு தருவாயா?

இயற்கை

இனியவளே!
ரோஜா
நிறம்
இல்லாமல் இருந்தால்
ரசிக்க முடியாது!
நிலவு
பொலிவு
இல்லாமல் இருந்தால்
பிரகாசிக்க முடியாது!
கடல்
அலைகள்
இல்லாமல் இருந்தால்
வியக்க முடியாது!
இனியவள்
நீ
என் காதலியாக
இல்லாமல் இருந்தால்
என்னால்
உயிர் வாழ முடியாது...!!!

பதில்

இனியவளே!
மனசு
நினைப்பதற்கு
நினைவு கிடைக்கவில்லை;
தூக்கத்தை
இரவில்
தேடினாலும் கிடைக்கவில்லை;
தனிமையில்
இனிமை காண
தனிமையும் கிடைக்கவில்லை;
புரியாத
குழப்பம்
விடையும் கிடைக்கவில்லை;
காதல்
சொல்ல
வார்த்தைகள் கிடைக்கவில்லை;
காதலி
சொல்லும்
வார்த்தையில் அனைத்தும் கிடைக்குமா?

Friday, April 04, 2008

புது சரித்திரம்

இனியவளே!
காதலிக்காத
காதலிகள்
மீது
ஆத்திரம் கொண்ட
காதலர்களை
பாத்திரங்களாக
கொண்ட
சரித்திரம்
சத்தியம் செய்தது
காதலின் முடிவு
தோல்வி என்று....
ஆனால்
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்து
புது சரித்திரம்
படைப்பேன்.....!
ஏனென்றால்
சாத்தியக்கூறு உள்ளதடி
என் காதலே
வெல்லும் என்று...!

கணைகள்

இனியவளே!
உன்
புருவ வில்லில்
இருந்து
புறப்பட்ட
பார்வை கணைகள்
என்னை
தாக்கி
இதயத்தில் தைத்தது....!

கிளிப்பிள்ளை

இனியவளே!
சூரியன்
சுற்றுவது அழகு என்றேன்;
சுருதி மாறாமல் அழகு என்றாய்!!!
தென்றல்
தொடுவது இதம் என்றேன்;
தடுமாறாமல் இதம் என்றாய்!
அருவி
துள்ளி வருவது அழகு என்றேன்;
அதுத்த கணமே அழகு என்றாய்!
உன்னை
நான் காதலிக்கிறேன் என்பேன்;
நீயும் காதலிக்குறேன் என்பாயா?

சுயரூபம்

இனியவளே!
ஊரில்
உலவும்
காற்றில்
உயிர்
வாழ வைக்கும்
மூச்சு காற்று
தனி;
மொத்தக்காற்றையும்
சுவாசித்தால்
சுத்தக்காற்று
போக
மிச்சக்காற்று
வெளி வரும்...
அதுப்பொல
என்
மனதில்
இனியவளாக
எவள் வந்தாலும்
அவளின்
ஏமாற்றும்
சுயரூபம் தெரிய
நானும் தெளிய
உன்னை மட்டும் காதலிப்பேன்!!!

தவறா?

இனியவளே!
மேகப்புடவை
கட்டிய
நிலவும்
அந்த
புடவையில்
ஊடுருவும்
சூரியனும் காதலிக்க...
சத்தம் போடும்
அலையும்
அது
முத்தமிடும்
கரையும் காதலிக்க...
சிங்கார
பூக்களும்
ரிங்காரமிடும்
வண்டுகளும் காதலிக்க...
இனியவள்
உன்னை
இனியவன்
நான் காதலித்தால் தப்பா?
இல்லை
நீ மறுத்தால் தப்பா?

Monday, March 24, 2008

நீயும் காதலி

இனியவளே!
கற்பனையில்
ஒருவனை
காதலித்துப் பார்...!
கால் கடுக்க
காதலனை
பார்க்க
கண்ட இடத்தில் நிற்ப்பாய்;
நெற்றி பொட்டை
நேரா நேரம்
புதியதாக மாற்றுவாய்;
அவன்
விழி இரண்டும்
உனை விழிக்கிறதா?
என்று விழித்து பார்ப்பாய்;
காதலை
சொல்ல
வழி தெரியாமல்
வீட்டு
வழி மறப்பாய்;
தனிமையில்
காதல் ஆட்சி
செய்வதை
இனிமையாக யோசிப்பாய்;
சொல்ல வந்த
வார்த்தையெல்லாம்
மெல்ல மெல்ல
மௌனமாக விழுங்குவாய்;
அவனிடம்
பேசும் போது மட்டும்
வார்த்தை மறப்பாய்;
இப்பொழுது யோசித்துப்பார்...?
உன்னிடம்
காதலை
சொல்ல முடியாமல்
காதலால்
நான் படும்
அவஸ்தைகளை....!

கண் அசைவு

இனியவளே!
ஒரு நொடி போதும்
உன் கண் அசைவிற்கு!
என் காதலை ஏற்றதற்கும்!
நூறு கோடி ஆண்டு வேணும்
உன் இதய வசத்தில்
அடிமயாவதற்கு....!

சிறை

இனியவளே!
வருங்காலத்தில்
உன்னிதயத்தில்
சிறைப்பட போவதை
விலா எலும்பிற்க்குள்
அடைப்பட்ட
என்னிதயம்
உணர்த்துகிறதோ!!

தீர்ப்பு

இதுவரை
காதல் சரியா? தப்பா?
என்று
அறியாமல் இருந்தேன்!
உனைக்
கண்டதும்
தீர்வை
கண்டேன்!!!

உலக கோப்பை

இனியவளே!
உலக கோப்பையை
இதில்
மட்டும்
வென்று விடுவார்கள்
உலக காதலிகள்!
காதலித்த
காதலர்களை
மாற்றுவதில்.....!
அலட்சியமாக
காதலர்களை
மாற்றும்
காதலிகள் இருந்தாலும்,
லட்சியமாக
அவளை
காதலிக்கும்
காதலன் கோழை அல்ல!!
காதலியும் கண்ணகி அல்ல!!

காதல் காட்சி

இனியவளே!
வண்ண வண்ண
கற்பனை
எண்ணம் கொண்ட
கனவில்
உன் நினைவெல்லாம்
திரையிட.....!
காலைக்காட்சி
பகல் காட்சி
இரவு காட்சி அல்ல;
இது
காதல் காட்சி
என
நீயும் நானும்
சந்தித்த பொழுது
கனவில் தெரிய
திடுக்கிட்டு எழுந்தேன்
நள்ளிரவில்....!
மறந்து விடு என்று
நீ சொல்லியதை
ஞாபகப்படுத்தும்
தாடியுடன்!!!

Sunday, March 23, 2008

அவஸ்தை

இனியவளே!
கலையிழந்த
பொழுதாக
கதிரவன்
கண் விழிக்க!
திரும்பி திரும்பி படுத்தும்
திரும்ப திரும்ப
மனதை உறுத்தும்
ஓர் நினைவு;
மணி
மணிக்கணக்கில்
ஓடி விட
மதியம் என்பதை
மறந்து
மனக்கணக்கில்
உனை நினைத்து
மனிதர்களையும்
மறந்து
தூங்காமல் தூங்கினேன்
இரவில்;
இந்த
அவஸ்தையெல்லாம்
ஏனென்று
நினைத்து
உன்னை மறக்கலாம் என்று
நினைத்தால்
மீண்டும்
உன் நினைவு...!

முற்றுபுள்ளி

இனியவளே!
தோல்விகள்
தொடர்கதைதான்
காதலுக்கு!
தோல்விதான்
முற்றுபுள்ளி
எனக்கு.

உலக சாதனை

இனியவளே!
உலக சாதனை
புத்தகத்தில்
இடம் பிடிக்கும்
உலக காதலிகள்...!
காதலித்த
காதலனை
உடனே மறப்பதில்!!!

இடப்பெயர்ச்சி

இனியவளே!
கிரகங்களின்
இடப்பெயர்ச்சி
வாழ்வில்
மாற்றங்கள்
ஏற்ப்படுத்துமாம்...!
தெரியவில்லை.
ஆனால்
நம்
இதயங்களின்
இடப்பெயர்ச்சி
என்
வாழ்வில்
ஏற்ப்படுத்தியது
மாற்றமும்,ஏமாற்றமும்...?

மறக்காதே!

இனியவளே!
உன்னை
தாஜ்மகால்
கட்ட சொல்லவில்லை...
ஆனால்
அணுவாக
உன்னிதயத்தில்
உள்ள
என்னை
மறக்காதே!
நினைப்பதற்க்காக;

தொடக்கவுரை

இனியவளே!
இனி
புரட்டப்படும்
பக்கங்கள்
ஒவ்வொன்றும்
உன்
நினைவு முத்தங்கள்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
எச்சில் காய்ந்தாலும்
உன்
நினைவு தேயவில்லை...
இதோ
காதல் கிறுக்கல்கள்....

Tuesday, March 18, 2008

கடிகாரம்

இனியவளே!
வாழத்தான் பிடிக்குமா
உன்னை
பிரிந்த நாட்களில்...
கடிகாரத்தையும்
மறந்து போனேன்;
கடிகாரம் எழுதும்
மணிக்கணக்கையும்
மறந்து போனேன்
நீ
என்னுடன்
இருந்த
வேளையில்...!
இன்றோ
என் கடிகாரம் மட்டும்
கணக்கை மறந்து விட்டதா!
நேரமும்
மாறவில்லை
பொழுதும்
விடிய வில்லை
நீ இல்லாமல்!!!

கையெழுத்து

இனியவளே!
திரும்ப திரும்ப
படித்தேன்
உன் கையெழுத்தை!
மாறி விட்டது
என்
தலையெழுத்து!!!

பிரிவு வாழ்க!

இனியவளே!
தொலைந்த
இதயத்தை
தேடினேன்;
தேடினேன்;
உன்னிடம்
தொலைந்த
என்னையும்
சேர்த்துதான்...!
இதயம் மட்டும்
உன் வீட்டு வாசலில்
விழுந்து கிடக்க,
நான் மட்டும்
என் வீட்டில்!
நம்மை பிரியாத
பிரிவு வாழ்க!!!

ஆசைகள் பலவிதம்

இனியவளே!
காதலர்கள்
ஆசைப்பட்டதால்
மனங்கள்
ஒன்றானது...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்
திருமணங்கள்
இரண்டானது...!

பெற்றோரின் ஆசை

இனியவளே!
இந்திய திரு நாட்டில்
இந்த காலக்கட்டத்தில்
புதிய
காவியங்களை
உருவாக்குவதற்கு
காதலித்த
காதலனுக்கும்
காதலிக்கும்
திருமணமாம்
வேறு வேறு மண்டபங்களில்...!
பெற்றோர்கள்
ஆசைப்பட்டதால்...!

கல்யாண மாலை

இனியவளே!
காதலிக்கும் பொழுது
காதலி
தரும்
புன்னகை பூக்களை
உதிர்த்து விட்டு
அவள்
ஏமாற்றியவுடன்
காதலனின்
கண்ணீர் பூக்களை
மாலையாக
அணிந்து
காதலி
மண மேடையில்!!!

கூடு விட்டு கூடு

இனியவளே!
உன் இதயத்தை
நானும்
என்
இதயத்தை
நீயும்
மாற்றிக் கொள்வதை
பார்த்து விட்டுதான்
கூடு விட்டு கூடு
பாயும் முறையை
ஆராய்கிறார்களோ!

Monday, March 17, 2008

பிடிவாதம்

இனியவளே!
இதய விளக்கில்
கண்ணீரை
எண்ணெயாகக் கொண்டு
காதல் ரோஜா
உள்ளே எரியுது;
மௌன உதடும்
வெளியே
சிரித்து நடிக்குது;
நம் காதலை
உன் மனமோ
ஏனோ மறைக்குது!!!

நேர்முகத் தேர்வு

இனியவளே!
உலக காதலிகளே
இனி மேலாவது
தோல்வியை
தாங்கி கொள்வார்களா?

என்று
நேர்முகத் தேர்வு வைத்து
காதலர்களை
காதலியுங்கள்!!!

இலவச இணைப்பு

இனியவளே!
உன்
மனக்கடையில்
காதல் புத்தகம்
வாங்கினால்
பின்னாளில்
இலவச இணைப்பாக
தோல்வி கிடைக்குமோ?

வேதனை

இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!


---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை

---------------------------------------------------

பச்சை மர ஆணி

இனியவளே!
நாம்
காதலித்த நாட்கள்
செல்லரித்து போக...
உன்னை
வர்ணித்த கவிதையில்
சொற்கள் பிரிந்து விழ...
நீ
உதடு சேர்த்து கொடுத்த
முத்தம் காய்ந்து போக....
நீ
தொட்ட இடங்களில்
வியர்வை வந்து அழிக்க...
நாம்
சந்தித்த நாட்கள் எல்லாம்
சத்தமில்லாமல் மறைய...
நீ
காதலித்த
என்னை
மணிக்கணக்கில் மறந்து போக...
ஆனால்
பச்சை மர ஆணி போல்
மனதில்
பதிந்த
உன் நினைவு மட்டும்
இன்னும் மறையாமல்......

பெற்றோர்

இனியவளே!
சூரியனும்
நிலவும்
ஊடல் செய்யும்
திரு நாள் இல்லை என்றாலும்;
பூவை
வண்டு
கற்பழிக்கும்
ஒரு நாள் இல்லை என்றாலும்;
சோலையை
தென்றல்
வெறுக்கும்
கோடை நாள் இல்லை என்றாலும்;
இயற்கை
அழிவுதான்
என்று,
மறு நாள் கூறும் அறிவியல் கண்டுபிடிப்பு;
என்னை
நீ
மறப்பதற்கு காரணம்
இந்நாள் கூறுவேன்
உன் பெற்றோரின் கண்டிப்பு!!!

வாழ்த்து

இனியவளே!
மார்ச் 14 [என் பிறந்த நாள்]
அமைதியை
கலைக்கும்
நோக்கத்துடன்
சுற்றும்
சூரியன்
தன் கதிரால்
வாழ்த்து சொல்ல...
ஆர்ப்பரிக்கும்
புல்லினங்கள்
ஆரவாரத்துடன்
வாழ்த்து சொல்ல...
இனிய பொழுதில்
இனிப்புடன்
மற்றவர்
வாழ்த்து சொல்ல...
ரோஜா மொட்டு
மலர்ந்து
மெல்லிசையுடன்
வாழ்த்து சொல்ல...
தென்றலும்
தேகத்தை உரசி
வாழ்த்து சொல்ல...
நம்பியிருக்கும்
நட்பும்
நன்றியுடன்
வாழ்த்து சொல்ல...
எதிர்ப்பார்த்தேன்
இதயத்தை
கொடுத்த
உன் வாழ்த்தை...!

அலட்சியம்

இனியவளே!
காலை
கதிரவன்
தன் விளையாட்டை
ஆரம்பித்த பொழுது,
அவனும்
திடுக்கிட்டுப் பார்க்க,
வெண்ணிலவு
வெட்க்கப் பட வந்த
புது நிலவாக
நீ
என்னை
அணைத்து
முத்தம் பதித்த நொடியும்;
மாலை கதிரவன்
ஓய்வுக்கு செல்லும் பொழுது,
மாலையை
மயக்க
மல்லிகை மலரும் பொழுது,
வசந்த பெண்ணிலவு
உன் மடியில்
நான்
தலை சாய்ந்த நொடியும்;
கனவாக
தோன்றியது
நீ
என்னை
அலட்சியமாக
மறந்த நொடியில்!!!

Thursday, March 13, 2008

காதல் தோல்வி

இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்!

Tuesday, February 26, 2008

புது வரலாறு

இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...!

சுடிதார் நிலவு

சடலங்களை போல
இருக்கும்
மரங்களை
உயிர்ப்பிக்க
தென்றல்
வரும் வேளையில்
மேகப் புடவை
தேவையில்லை என்று
அலட்சியமாக
வீதியில் இறங்கி
சுடிதார் அணிந்து வந்த
நிலவாக
உன்னை
பார்த்த பொழுது
களவாடப்பட்டேன்
உடன் பொழுதே
தற்காலிக பைத்தியமானேன்...!
காதல் கொண்டேன்....
காதலும் தோல்வியும்
ஒட்டி பிறந்தவர்கள்
என்று தெரியாமல்....!

வரம்

இனியவளே!
காதலியிடம்
காதலை
கூறும் போது
மறக்காமல்
மன உறுதியை இறைவனிடம்
கேள்...!
பழகிய பிறகு
அவள் தரும்
தோல்வியை
தாங்கி கொள்ள!

திருநாள்

இனியவளே!
முப்பது நாட்கள்
தேடல்
விளையாட்டில்
சூரிய காதலனும்
நிலா காதலியும்
சேரும்
திருநாள் உண்டு
என்றால்
நானும் நீயும்
இணைவோம்...!
நிமிடங்கள்
வருடங்களாக மாறினாலும்;

பயம்

இனியவளே!
ரோஜாவே! ரோஜாவே!
என்னை
முள்ளால்க் குத்தி
குருதியை
சாயமாக
பூசிக் கொள்ளாதே!
வெண்ணிலவே! வெண்ணிலவே!
என்னை
பள்ளத்தில் தள்ளி
நீ
மட்டும்
மேகத்தில் சுத்தாதே!
தென்றலே! தென்றலே!
என்னை
காதலால் சுட்டு
நீ மட்டும்
இதமாய் இருக்காதே!
இனியவளே! இனியவளே!
என்னை
அலட்சியமாக
மறந்து
ஏமாந்து போகாதே!

இனியவள்

இனியவளே!
உன்னை
நிலவு
என்றால்
வெட்க்கப்பட்டு
காதலை மறைப்பாய்...
ரோஜா
என்றால்
கோபப்பட்டு
காதலை குத்துவாய்...
தென்றல்
என்றால்
புயலாய் புறப்பட்டு
காதலை அழிப்பாய்...
பெண்
என்றால்
அலட்சியப்பட்டு
காதலை மறப்பாய்...
இனியவள்
என்றால்
காதல் பட்டு
இனியவன் என்னை காதலிப்பாய்...!

மறக்காதே!!!

இனியவளே!
சிரித்தாய்...!
இதயத்தை தொலைத்தேன்;
காதலித்தாய்...!
உலகை மறந்தேன்;
மறந்தால்
உயிரையும் துறப்பேன்!

முதன் முதலாய்

இனியவளே!
நான்
ரசித்த
முதல் சப்தம்,முதல் அமைதி,
முதல் பாடல்,முதல் கவிதை,
முதல் தினம்,முதல் சினம்,
முதல் மழை,முதல் அலை,
முதல் வானவில்,முதல் தென்றல்,
முதல் சூரியக்கதிர்,முதல் மோதல்,
முதல் நிலவொளி,முதல் இருட்டு,
முதல் படம்,முதல் பாடம்,
முதல் தேர்ச்சி,முதல் தோல்வி,
முதல் அழுகை,முதல் கவலை,
முதல் ஆனந்தம்,முதல் கோபம்,
முதல் இயற்கை,முதல் செயற்கை,
முதல் ஆலை,முதல் சோலை
நினைவேயில்லை....!
முதல் காதலையும்
அதை தந்த
உன்னையும் மறக்க முடியுமா?
என்
நினைவிருக்கும் வரை.....

சத்தியம்

இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!

துணுக்குகள்

இனியவளே!
உன்னோட
மனசதான்
காற்றில் கரைச்ச....
இப்ப
என்னோட
காதலத்தான்
மனசுல மறைச்ச....
*உன்
திருமண நாள்;
என்
இறுதி நாள்!
*என்னோட
காதலி நீ
"மண்ணோடு போ" என்று
மறந்து விடுவாயோ?
என்னை!
என்னோட
மனசு
"கல்லாகி மாறி"
மறந்து விடுமா?
உன்னை!

Thursday, February 21, 2008

ஒப்பந்தம்

இனியவளே!
காதலுடன்
ஓர்
ஒப்பந்தம்!
தோல்வி தரும்
காதல் விதையை
மனிதரில்
தூவாதே என்று!

தோல்வி

இனியவளே!
கண்ணால்
காதல் தந்தாய்!
காதலால்
கவிதை தந்தாய்!
பின்
எதனால்
தோல்வி தருவாய்!

புலம்பல்

இனியவளே!
பல நாட்கள்
பழகியது
ஒரு நாளும்
மறக்க வில்லை!
பழகாத
ஒரு நாளும்
பல நாட்க்கள்
ஞாபகமில்லை!
நித்தம்
ஒரு கவிதை தந்தாய்!
பித்தம்
தலைக்கேற காதல் தந்தாய்!
சத்தம்
இல்லாமல் என் சகாப்தம் அழித்தாய்!
உன் குரல்
நான்
தினமும் கேட்கும் இன்னிசையோ!
உன் முகம்
நான்
தினமும் கனவில் பார்க்கும் முகமோ!

மறக்காத நினைவு

இனியவளே!
வாழ்ந்தால்
உன்
அங்கமெல்லாம் உயிராக
மகிழ்ந்து வாழ்வது
இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி
உயிர் துறப்பது என்று
சத்தியம் செய்தப்படி
சிதைந்தது என் மனசு!
என் காதல் தேசக் கொடி போன்ற
உன்
கூந்தல் நீர்
படாமல்
வறண்டது என் இதயம்...!
உன்
முகங்கண்டு
வேகங்கொண்டு
காண வந்த போதும்
புது ஜனனம் கொண்டேன்;
உனை காணாதப் பொழுது
ஒரு மரணம் கண்டேன்!
உன்
நினைவு
வரும் பொழுதெல்லாம்
உயிர் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளை தூக்குது!
அது கவிதையாக வளருது;
ஆசையும் துறந்து போனேன்
அதிகாரத்தையும் மறந்து போனேன்
நீ என்றதும் பறந்து போவேன்
காதல் தேசத்திற்கு...!
மறக்காத நினைவு
துறக்காத உறவு
இதுவே என்
இனியவள்!
பனிக்குடம் உடைந்து
உலகம் வந்த நாள் முதல்
இதயம் பதிவு செய்த
நினைவுகள் அனைத்தும்
மரண படுக்கைக்கு சென்றாலும்
நீயும் நானும்
ரசித்த பொழுது ஒவ்வொன்றும்
என் மரணத்திலும்
இதயம்
மறக்காத நினைவுகள்!

ஞாயிறு விடுமுறை


இனியவளே!
ஞாயிறு விடுமுறை...!
நாளெல்லாம் நினைச்சு
மகிழ்ச்சி இல்லாட்டி
இருக்கவே இருக்கு
மனசு சொல்லும்
ஞாயிறு விடுமுறை!
வாழும் வாழ்க்கையும்
தூங்கி கிடக்கிறது;
ஞாயிறு என்று
வரும் பொழுதெல்லாம்
அது
விழித்துக் கொள்கிறது!
ஒவ்வோரு ஞாயிறு விடுமுறையின் போது
இருதயம் மகிழ்ந்து பிறக்கிறது!
ஆனால்
இன்றைய ஞாயிறு விடுமுறை....!
தடம் மாறி விட்டது;
நிலவைப் பார்க்காத சூரியனாக...!
பூவைக் காணாத தேனீயாக...!
தென்றலே இல்லாத சோலையாக...!
சோலை இன்று பாலைவனமாக!
ஆமாம்
உன்னை
பார்க்காத நாட்க்களில்
மரணம்
எனக்கு
படுக்கை தட்டி போடுகிறது;
ஆறாவது நாளின்
முடிவில்
மனதை ஆட்டி படைக்கும்
இனம் புரியாத
கவலை...!
உனைப் பார்க்காமல்....!
கடந்த
சில காலமாய்
இப்படியோரு கனவு...?
ஞாயிறு விடுமுறையே
இல்லை என்று;
ஞாயிறு அன்று
சாவென்றால் வருத்தமில்லை....!?
சாவின் அருகில்
நீ
இருந்தால் மகிழ்வேன்!
எல்லா இரவுகளையும்
நான்
விழுங்கினேன்;
ஆனால்
உனைப் பார்க்காத
ஞாயிறு இரவு
என்னை
விழுங்கியது இன்றுதான்!
இந்த நாள்
என் உயிரின்
முக்கால் பாகத்தை
உறிந்து விட்டது;
ஏ ஞாயிறே!
என் ஒவ்வொரு நாளும்
என்னவளுடன்
இருக்கும் போது
அவள் இல்லாத
நீ மட்டும் எதற்கு?
மரணம் வரைக்கும் சென்ற நான்
இன்னொரு ஜனனம் காண்பது போல
ஞாயிறே நீ போய் விடு....!
என்னவளை என்னுடன்
சேர்த்து விடு...!
இனியவளே!
பொழுது சாய சாய
உன் நினைவு
என் நிழலாக!

கவிஞன்

இனியவளே!
விழிக்காத
இரவு தந்த
விழித்த
விண்மீன்களும்,
விழித்த
பொழுது தந்த
விழி சாயாத
சூரியனும்,
சோலையின்
வரிகளுக்கு
தென்றலின்
இசையை சேர்த்து
பாடும் குயில்களும்,
தனிமையில்
கவிப்பாடும்
என்னைப் பார்த்து
சிரிக்கும்....!
என்னுடன்
இல்லாமல்
நினைவாக
இருக்கும்
உன்
காதலுடன்
கவிப்பாடுவேன்
என்
நினைவிருக்கும் வரை....!

மொழி

இனியவளே!
காற்றின்
மொழியை அறிந்தேன்
உனக்கு தகவல் சொல்ல!
கிளியின்
மொழியை அறிந்தேன்
உனக்கு
தூது சொல்ல!
தமிழ்
மொழியை அறிந்தேன்
உனக்கு
காதல் சொல்ல!

சுகம்

இனியவளே!
காற்று
தரும்
மென்மையை விட
நீ
தரும்
காதல் சுகமானது!

நினைவு

இனியவளே!
நீ என்னை
பார்க்கா விட்டாலும்
நீ என்னிடம்
பேசா விட்டாலும்
நினைக்கிறாயே!
நினைவு மட்டும் போதும்...!
என்னிதயத்தை
நினைக்க செய்வது
நீதானே!
நினைப்பதை
முடித்து விடு!!
முடியாது என்றால்
மூன்று ஜென்மம்
கடன் வாங்கினாலும்
வாழ முடியாது...!?
உன்னால் முடியும்
என்றுதானே
நானும் நினைத்தேன்!
முடியாது என்றால்
நான் முடிப்பேன்
நீ சொல்வதை!!!

Tuesday, February 19, 2008

இயற்கை நியதி

இனியவளே!
ஆண்டவனே
என்னைக் கேட்டாலும்
கொடுக்க மாட்டேன் என்றாயே!
உனக்கு தெரியுமா?
சூரியனிடமிருந்து
வெளிச்சத்தையும்!
நிலாவிடமிருந்து
பொலிவையும்!
ரோஜாவிடமிருந்து
புன்னகையையும்!
தென்றலிடமிருந்து
இதத்தையும்!
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன்னிடமிருந்து என்னையும்
பிரிக்க முடியாது!
மாற்றங்கள் நிறைந்த
வாழ்க்கைதான்....!
இயற்க்கையை மாற்ற முடியாதே!
உன்னிடமிருந்து என்னை
யாராலும் பிரிக்க முடியாது!!!

காத்திருப்பு

இனியவளே!
சூரியனும்
அணுகுண்டாக மாறி
வெப்பம் உமிழ்ந்தான்!
தென்றலும்
திராவகமாக மாறி
தோலை உரித்தது!
அதிசயம் போல
நொடி பொழுதும்
மாறாமல்
என்னை வதைத்தது!
அதெப்படி
உனக்கு காத்திருக்கும்
நரகப் பொழுது மட்டும்
இவ்வாறு எனக்கு தெரியுது!
ஆனால்
காத்திருந்த கண்கள்
உனை காணாதப் பொழுது
தன்னையே
குருடாக்கிக் கொள்ள
முயற்ச்சிக்குது!

நிரந்தரம்

இனியவளே!
பிரிவு நிரந்தரமல்ல
உண்மைதான்....!
சில சமயம்
பிரிவு
விரோதியாக
மாறி விடும்!
சில சமயம்
பிரிவு
சுகத்தைத் தரும்!
பிரிவின் முடிவில்
உன்னை
சந்திப்பது என்றால்,
சாவின் விளிம்பில் நின்ற
எனக்கு
உயிர்ப்பிச்சை அளிப்பது
போலத் தோன்றும்!!!
ஆனால்
பிரிவு நிரந்தரமானால்
என்னிதயம்
உன் நினைவை
நினைத்துக் கொண்டே
துடிப்பை நிறுத்தும்!!!

முட்டாள்

இனியவளே!
புது வருடம் பிறந்தாலும்
புத்துணர்ச்சி தரும்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
பிறந்த தினமாக
இருந்தாலும்
சூரியனுக்கு முன்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
தொழில் தொடங்கினாலும்
தோள் கொடுக்கும்
தோழி
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
அதுப்போல
முட்டாள்களின் தினமான
இன்று (ஏப்ரல்1)
உன்னிடம் மட்டும்
ஏமாற நினைத்தேன்!
கண்டிப்பாக
முட்டாளாக்கி விட்டாய்!
தொலைபேசியில்
பேசுவாய் என்று
ஏமாந்தேன்....!
ஆனால்
வாழ்க்கை முழுவதும்
முட்டாளாக்கி விடாதே!

முடிவு

இனியவளே!
சுற்றும் சூரியனும்
ஒரு நாள்
ஒரு நொடி நிற்கும்!
வற்றாத ஆறும்
வடிந்த பின்
கடலில் கலக்கும்!
பிறக்கும்
ஒவ்வோரு வருடமும்
டிசம்பரில் முடியும்!
சொல்ல முடியாத
சோகமும்
அழுகையில் முடியும்!
சில்லிடும் தென்றலும்
சில சமயம்
குளிர்மையில் முடியும்!
அமைதியான இசையும்
அருமையான
ஆர்பாட்டமாக மாறலாம்!
எதுவாகயிருந்தாலும்
முடிவு தெரியும்....!
ஆனால்
என் முடிவு....?!
உன் முடிவுதான்!

ஆசை

இனியவளே!
உன் விரல் பிடித்து
வீதியில் நடக்க வேண்டும்;
தோளோடு தோள் சாய்ந்து
சலிக்காமல் கவிதை
உன்னிடம் சொல்ல வேண்டும்;
நான் கொடுத்த
ஒற்றை ரோஜா
உன் கூந்தலில் ஏற வேண்டும்;
அந்தி வானத்தில்
நீயும் நானும்
இரத்த சூரியனை ரசிக்க வேண்டும்;
எண்ணி எண்ணி கலைத்து
விடப்பட்ட விண்மீனை
நீ சொல்லி
திரும்ப எண்ண வேண்டும்;
வானத்தின்
ஏழு வண்ண் ஓவியமாம்
வானவில்லை
நானும் நீயும் ரசிக்க வேண்டும்;
காலையில்
என் விழி விழிக்கும் போது
உன் விழி இருக்க வேண்டும்
என்றெல்லாம்
ஆசைப்பட்டேன்;
ஆனால்
இன்று
பேசினால் மட்டும் போதுமே!

Friday, February 15, 2008

கல்லறை

இனியவளே!
சூரியன்
நிலாவின் நினைவோடு
ஊரைச் சுற்றுவது போல
உன் நினைவோடு
நாட்க்களை கிழித்து
ஊரைச் சுற்றும் போது
பலருக்கு அறிமுகம் ஆனேன்;
இருந்தாலும்
என்னை எனக்கு
அறிமுகம் செய்தது
உன் விழிதானே!
உன்னால்தானே
நானும் வாழ
வாழ்க்கைக்கு விண்ணப்பம் செய்தேன்!
எனக்கே எனக்கு
என்னை பிடிக்காதப் பொழுது
உனை விரும்பிய மனம்
தினம் உனை நினைக்காவிடின்
கல்லறைதான்
என்னின்
அரண்மனை........!

நரக வேதனை

இனியவளே!
காலை கதிரவன்
கண் விழித்தாலும்
என் கண்
விழிக்க மறுக்குது!
என் இராஜ்யத்தின்
சூரியன்
நீதான் என்னுடன் இல்லையே!
என் தொலைந்த முகவரியை
தேடி பார்த்தேன்;
உன்னிதயம்தான்
அதுவென்று
உன் கண்களை
பார்த்த பின் தெரிந்தது!
முகவரிக்கு அடையாளமாக
உன் கண்கள்!!!
நீ
என்னுடன் இல்லாத
தினங்களில்
நரகம்
என்னை குத்தகைக்கு
எடுத்து விட்டது....
உனை பிரிந்தது
கண நேரமாக இருந்தாலும்
நரக வேதனைதான்;

காதல் ஞானம்

இனியவளே!
என்றோ ஒரு நாள்
நாமிருவரும்
சந்தித்தால்
பேருந்தில்
இறங்கும் இடம்
மறந்து
இறக்கி விடப்படுகிறேன்....!
சுற்றி நடப்பது
தெரியாமல்,
பொசுக்கென்று
பூகம்பமே வந்தாலும்
அறியாமல்,
உன்னை
பார்த்தவாறு இருக்கிறேன்....!
கண்களில்
என்னை
ஆட்டிப் படைக்கும்
ஒளிக்க்ற்றை கொண்டுள்ளாயா?
விஞ்ஞானம் தெரிந்திருந்தால்
அறிந்திருப்பேன்;
காதல் ஞானத்தை கொண்டுள்ளதால்
காதலிக்கிறேன்....!

Monday, February 11, 2008

பிடிவாதம்

இனியவளே!
சின்னதொரு பிரிவு
ஆடும் ஆட்டத்தையே
தாங்க முடியவில்லையே!
முடிவு தெரியாமல்
ஆடும் ஆட்டத்தை
நினைத்தால்
உயிர் மொத்தமும்
வாயின் வழியாக
எட்டிப் பார்க்குது!
தன்னந்தனியே
நான் நடக்கையில்,
"ஒரு வேளை
நீயில்லாத முடிவென்றால்"
என்னுயிர்க்கு கடைசியாக
இதயம் அடிக்கும்
அலாரமும்
துல்லியமாக கேட்குது!
நம்பிக்கை உள்ளதடி...!
என் உணர்வுகள்
உனை எட்டியதென்றால்,
உன் பிடிவாதத்தை
கை விடுவாய் என்று!
நானும் உன்னுடன் வாழ்வேன்.

திரைப்படம்

இனியவளே!
நீயில்லாத
வாழ்க்கையே
எனக்கு
வேண்டாம் என்றேன்.
"அதுவெல்லாம்
வெறும் வார்த்தைதான்....
எல்லோரும் இப்படிதான்"
என்று கூறினாள்
உன் தோழி!
சமீபத்திய திரைபடம்
பார்த்து விட்டு
நிஜ வாழ்க்கையையும்
திரை வாழ்க்கையையும்
ஒப்பிட்டுள்ளாள்;
இருக்கட்டும்....
நீ கிடைக்காமல்
நான் இறந்த பிறகாவது
அவளுக்கு தெரியட்டும்
"என்னுயிர் நீதான்" என்று!

வாழ்க்கை துணை

இனியவளே!
காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்னே
கதிரவனாய் வருகிறாய்!
தனிமையில் நானிருந்தால்
தவிப்பை போக்க
தென்றலாய் வருகிறாய்!
தோல்விகளில் தொலைந்த பொழுது
தோள் கொடுக்க
தோழியாய் வருகிறாய்!
கவலைகளில் கழுத்து வரை
புதைந்திருந்த பொழுதும்
காக்க வருகிறாய்!
மாலைப் பொழுதில்
உன் நினைவில் மயங்கியிருந்தால்
நிலவாக வருகிறாய்!
எல்லையில்லாமல் எவ்விடம்
நான் சென்றாலும்
நிழலாய் வருகிறாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
புரிய வைக்க!
என்னுள் பாதியாக!
எப்பொழுது வருவாய்?

நீ வருவாயா?

இனியவளே!
முள்ளும் ரோஜாவும்
சூரியனும் நிலாவும்
தென்றலும் சோலையும் என்று
முரண்பட்டவைகள்
ஒன்றாய் இருக்க!
மனம் ஒன்றான
நாம்
எப்போழுது சேருவோம்
நம்பிக்கை
என்னைத் தேற்றியது
நீ
என்னுடன் இருந்தால்
''சகலத்தையும் வெல்லுவேனாம்!''
உண்மைதானே
நினைத்ததை முடிக்க
நினைக்காததையும் முடிக்க
தோல்விக்கு தோள் கொடுக்க
வெற்றிக்கு வழிக்காட்ட
வாழ்க்கைக்கு ஒளியூட்ட
நீ வேண்டும்!
வருவாயா....?
வருவாய்.

பொக்கிஷம்

இனியவளே!
நீ
வெட்டி எறிந்த
நகத்துண்டு
பிறைத் துண்டாக ஒளிர,
உன்
பார்வைப்பட்டு
உடைந்த
கண்ணாடி சில்லுகள்
விண்மீங்களாய் மின்ன,
உன்
தொடுதலை
உணர்த்தும்
தென்றல்
என்னை முத்தமிட,
என்னுடன்
நீயில்லாத நேரத்தில்
உன் நினைவை
நினைத்து
கவிதை எழுதுவேன்
என்
நினைவிருக்கும் வரை....

பயணம்

இனியவளே!
மனம் விட்டு பேச
உன் தோள் தேடினேன்?
கவலைகளை மறக்க
உன் மடி தேடினேன்?
தோல்விகளை தொலைக்க
உன் ஆதரவு தேடினேன்?
அதுவெல்லாம் இருக்கட்டும்!
இன்றாவது
என்னிடம் பேசுவாயா?
உன் நினைவுகளெல்லாம்
என் நிழலாக!
நாம் சந்தித்த நாட்களெல்லாம்
சிந்தனையில் ஓட!
என் நினைவெல்லாம்
உன்னை பற்றியே
நினைக்க!
முடிவெடுத்தேன்
உன்னைப் பார்க்க!
உன்னை நோக்கிய
என் பயணம் ஆரம்பம்....!

சுவாசம்

இனியவளே!
யோசித்தால்
கவிதை வரும்
உண்மைதான்...
கவிதை எழுத
யோசித்தேன்...
நேசிக்கும்
உன்னைப் பற்றியே
யோசிப்பதால்
கவிதையிலும்
உன்னை
சுவாசிக்கிறேன்!
என் கவிதையை
வாசிக்கும்
உனக்கு தெரியுமா?
கவிதையின்
வாசம் மட்டுமல்ல
என் சுவாசமும்
நீதான் என்பது!
சுவாசம் இல்லையென்றால்
என் வாசமே
மண்ணிற் இராது!?

குறிஞ்சி பூ

இனியவளே!
தினம் தினம்
வகுப்பிலும்!
காலை சூரியன்
மஞ்சள்த் தேய்த்துக்
குளிப்பதற்கு முன்பே
கோலம் போடுகையிலும்!
சுட்டெரிக்கும்
சூரியன் உச்சிக்கு
வந்தாலும்
அவனை நிலவாக
கற்பனை செய்து
மொட்டை மாடி வெய்யிலிலும்
தன் காதலியை
பார்க்கும் நண்பன்,
சொந்தம் பார்க்க
சென்றவளை
காண முடியவில்லை
இன்று என்றான்!
அவனுக்கு தெரியுமா?
குறிஞ்சி பூவாக
நாம் சந்திப்பது!

Saturday, February 09, 2008

காலம்

இனியவளே!
காலம்
என்னைத்
துரத்தும்!
நானும்
காலத்தைத்
துரத்துவேன்!
மராத்தான் ஓட்டமாக
காலமும்
நானும் ஓடுவோம்!
முடிவு
தெரிகிறதோ இல்லையோ
ஓடுவதில்
குறியாக இருந்தோம்!
காலத்திற்கு நானும்
எனக்கு காலமும்
ஜென்ம விரோதிப் போல
துரத்துவோம்!
காலம் ஓடுவதை
நிறுத்தி விட்டது;
நானேத் துரத்தினாலும்
ஓடவில்லை......
நான் உனக்காக
காத்திருக்கும் வேளையில்!

கனவு விஞ்ஞானி

இனியவளே!
யாரும் இல்லாத
ஓடத்தில்
நான் பயணித்தேன்
செவ்வாயை நோக்கிய
பயணம்!
பயணத்தின் முடிவில்
செவ்வாய் கோளில்
நீரை கண்டறிந்தேன்!
தினம் தினம்
செய்திகளில்
என்னைப் பற்றி!
உலகம் தன் குடுமியில்
என்னைத் தூக்கி வைத்து
பாராட்டியது!
இதுப்போல
பல கனவுகளும்
உனக்காக
நான்
காத்திருக்கும் நேரத்தில்
விசாரித்து விட்டு
சென்றன என்னை!

வழிக்காட்டி

இனியவளே!
சூரியனாக இருந்து
உயிர் தந்தாய்!
நிலவாய் இருந்து
பொலிவு தந்தாய்!
சோலையாக இருந்து
தென்றல் தந்தாய்!
தமிழாக இருந்து
கவிதை தந்தாய்!
தனிமையாக இருந்து
அமைதி தந்தாய்!
இனியவளாக இருந்து
வாழ்க்கை தந்தாய்!
இதுப்போல
நான் கூறினாலும்
பிறப்பின் உணர்வை
வாழ்க்கையின் அர்த்தத்தை
வெற்றியின் ரகசியத்தை
சொன்ன
உன்னை
நான் மறப்பேனா?
என்
நினைவிருக்கும் வரை!

முதல் சந்தோசம்


இனியவளே!
கவிதை எழுத
வார்த்தைகளை தேடினேன்?
வராத வார்த்தைகள்
உன் பேச்சில்தான்
மறைந்திருந்தனவா?
உன்னிடம்
பேசியவுடன்தான்
கவிதையும் தானாக
காதல் பேசுது!
நினைவுகளாய் இருந்த
நம்
குறிஞ்சி சந்திப்புகள்
மீண்டும்
பூக்கப் போகிறது;
பனிக்குடம் உடைந்து
நினைவு தெரிந்த
நாள் முதல்
நான்
சந்திக்காத சந்தோசம்
இன்றுதான் சந்தித்தேன்!
உன்னிடம் பேசியப்பிறகு!

தொலைப்பேசி

இனியவளே!
நம்முடன்
மட்டும்
பிரச்சினைகள்
கூட்டணி அமைத்து விட்டதா?
காலங்கள்
கடப்பது தெரியாமல்
பூங்காவில்
நேரத்தை கழித்தோமா?
மற்றவர்கள்
பார்ப்பது தெரியாமல்
தோளோடு தோள் சாய்ந்திருந்தோமா?
எண்ணி எண்ணி
பத்து நாள்
சுத்தியிருப்போமா?
உணர்வுக்கு
உயிர்க் கொடுத்து
தொலைப்பேசியில்தானே பேசினோம்!
இதுவும் கூட
தொலைப்பேசிக்கும் பிடிக்கவில்லையா?
சில நாட்க்களாக
உன்னிடம்
தொலைப்பேசியிலும் பேச முடியவில்லையே!

தன்னம்பிக்கை

இனியவளே!
மனதில்
கவலை ஆட்சி புரிய
கண்களில்
துக்கம் திரையிட
என் கையை
உன் கையோடு
இணைத்தாயே!
நிலவை தொட்ட உணர்வு
தென்றலை தொட்ட உணர்வு
பிறப்பின் அர்த்தம் உணர்ந்த உணர்வென்று
நான் கூறினாலும்
கையைப் பிடித்தாயே
பாசத்தோடு...!
அதிலிருந்து
உணர்ந்தேன்
எதையும் சாதிப்பேன்
நீ
என்னுடன் இருந்தால்...!

நினைவு

இனியவளே!
தெரியாத தேசம் சென்ற
தென்றலும்
தேடி வந்தது;
வழக்கம் பொல வானத்தில்
விடியல் வந்தாலும்
உன் முகம் கண்டவுடன்
என் வானம் விடிந்தது....
மணிக்கணக்கில்
நடந்த
நம் சந்திப்புகள்
மனக்கண்க்கில்
தெரிந்தது...
சத்தமில்லாமல்
சந்தோசம்
என்னை தேடியது...!
இவையெல்லாம்
தொடர
நீ
என்னுடன் இருப்பாயா?

உறவு

இனியவளே!
தேடிப்பார்த்தேன்
தென்றலையும்
காண வில்லை....
வருமென்று
நினைத்தேன்
வசந்தமும்
வரவில்லை....
எழுதலாம் என்று
நினைத்தேன்
கவிதையும்
வரவில்லை....
தெரிந்து விட்டது
என்னுடன் நீயில்லையென்று!
தென்றலாக
இதம் தரவில்லையென்றாலும்
வசந்தமாக
வாசம் தரவில்லையென்றாலும்
இனியவளாகி
என்
உயிர் தருவாயா?

பிரிவு

இனியவளே!
சின்னதொரு
பிரிவை தந்தாய்...?
ஏனோ தெரியவில்லை
உன் நினைவு மட்டும்
பிரியவில்லை.....?
மறுத்த நினைவு
பிரிய நினைத்த
உனை
ஞாபகப்படுத்த....
வருந்திய இதயம்
விரும்பிய
உன் நினைவை
அசைப்போட்டது!
உன் நிழலை
என்னிடமிருந்து
பிரிக்க நினைத்தாயே!
உன் நினைவை
மனதிலிருந்து
பிரிக்க முடியுமா?
இதயத்தை கிழித்து......!

Thursday, January 24, 2008

எதிர்ப்பார்ப்பு

இனியவளே!
என்னுடன்
நீயில்லாத
ஞாயிறு விடுமுறையே
வேண்டாம் என்றேன்!
நீ
நடைப் பயிலாத
கவிதையே
எழுத மாட்டேன் என்றேன்!
தோல்வி நேரத்தில்
தோள்க் கொடுக்க
நீயில்லை என்றால்
தோள்களே வேண்டாம் என்றேன்!
மடைத் திறந்த வெள்ளமாக
மகிழ்ச்சி வந்தாலும்
நீயில்லை என்றால்
அதுவும் வேண்டாம் என்றேன்
அது சரி!
நீயில்லாத வாழ்க்கை மட்டும் எதற்கு?

கனவு

இனியவளே!
மரங்களெல்லாம்
எதிர் திசையில்
ஓடுவதை
ஜன்னல் வழியே ரசிக்கும்
பயண நேரத்திலும்,
தமிழ் வார்த்தைகளை
இசையோடு கோர்த்து
பாடிக் கொண்டே ரசிக்கும்
இனிமை நேரத்திலும்,
முதல் உலக பெண்
வரைந்த கோலத்திலுள்ள
புள்ளிகளை அன்னாந்து ரசிக்கும்
இரவு நேரத்திலும்,
என்னுடன் இருந்தாயே!
ஓ.....!
கனவாக் கண்டேன்!
கனவிலாவது
என்னுடன் இருக்கிறாயே....!

பிறப்பு

இனியவளே!
சூரியன் தன்னையறியாமல்
ஊரைச் சுற்றுவதும் தெரியாமல்,
மனிதர்கள்
மணிக்கணக்கில்
மகிழ்வதும் தெரியாமல்,
பூக்களின்
மயக்கும்
நறுமணமும் தெரியாமல்,
தினங்கள்
நாட்களாக
பிறப்பதும் தெரியாமல்,
கவிதை எழுத
வார்த்தைகளும் தெரியாமல்......,
தெரிந்து விட்டது....!
நீ என்னுடன் இல்லை
என்பது மட்டும்.

Tuesday, January 22, 2008

வெளிச்சம்

இனியவளே!
கண்னில்
வலியிருந்தால்
கண்ணீர்க் காட்டி விடும்!
உன்னில்
காதலிருந்தால்
கண்ணில் காட்டி விடும்!
உன் பேச்சுக் கேட்காமல்
நான் பேச மறந்தேன்!
உலகம் உறங்கினாலும்
உள்ளம் உறங்கவில்லை...
சத்தமின்றி
தினங்கள் பிறப்பதுப் போல
நித்தம் செத்து பிறக்கிறேன்
உன் குரல் கேட்க்காமல்!
வழி தெரிய
விழி உள்ளதுப் போல
வாழ்க்கை வழி தெரிய
உன் விழி வேண்டுமே!
உன்னிதயத்தில்
தொலைந்த
என்னிதயத்தை
பத்திரமாக வைத்து கோள்.....!

காதல் கட்டுரை

இனியவளே!
காதலில்
ஜெயம் காண,
நான் எழுதிய
ஆராய்ச்சி கட்டுரைகள்
சில இதோ!
கட்டுரைக்கு
முற்றுரை இருக்கும்.
என் காதல் கட்டுரைக்கு
முற்று புள்ளி இல்லை.
தொடர்ப்புள்ளிதான்.
உன்னுடன் கூடிய
தொடர்ப்புள்ளி....
இனியவனின்
காதல் சோலையில்
மலரும்
கவிதை ரோஜாக்கள்
மத்தியில்
இனியவளின்
காதல் பயணங்கள்....